நெல்லை நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு
நெல்லை அருகேயுள்ள கல்லிடைக்குறிச்சி என்ற பகுதியில் கடந்த 1982-ம் ஆண்டு திருட்டு போன ரூ.30 கோடி மதிப்பிலான ஐம்பொன் நடராஜர் சிலை, ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கபப்ட்டுள்ளது.
இந்த நடராஜர் சிலையை உடனடியாக மீட்டு தமிழகம் கொண்டுவர வேண்டும் என உயர்நீதிமன்ற புலன் விசாரணை குழு தீவிரம் காட்டியுள்ளது.
36 வருடங்கள் கழித்து திருட்டு போன சிலை மீண்டும் நெல்லைக்கு வர அதிக வாய்ப்பு உள்ளதால் அந்த பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்