நேந்திரம்பழ பாயசம் செய்வது எப்படி

நேந்திரம்பழ பாயசம் செய்வது எப்படி

1.91தேவையான பொருட்கள் :

நேந்திரம்பழம் – 3,
வெல்லம் – 100 கிராம்,
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,
நெய் – 3 டேபிள்ஸ்பூன்,
உடைந்த முந்திரித்துண்டுகள் – 3 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – அரை கப்.

செய்முறை :

* தேங்காய்த் துருவலை சிறிதளவு நீர்விட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும்.

* வெல்லத்தை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும்.

* நேந்திரம் பழத்தை தோல் நீக்கி நறுக்கிக்கொள்ளவும். இதனுடன் சிறிதளவு நீர் சேர்த்து வேகவைக்கவும்.

* அடுத்து அதில் கொதிக்க வைத்த வெல்லத்தை சேர்த்து எல்லாமாகச் சேர்ந்து வெந்ததும், அரைத்த தேங்காயைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கிவிடவும்.

* கடைசியாக முந்திரித்துண்டுகளை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.

* சுவையான நேந்திரம்பழ பாயசம் ரெடி.

Leave a Reply