நேருக்கு நேர் இரண்டு ரயில்கள்: 3 பேர் சஸ்பெண்ட்
மதுரை – செங்கோட்டை இருமார்க்க செல்லும் இரண்டு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் வந்து மோதும் சூழல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து கூறப்படும் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை கள்ளிக்குடி ஸ்டேஷன் மாஸ்டர் பீம்சிங் மீனா, திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயகுமார், கண்ட்ரோலர் முருகானந்தம் ஆகிய மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என ரயில்வே உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இரு மார்க்கமாக செல்லும் ரயில்கள் நேருக்கு நேர் வருவதை உரிய நேரத்தில் கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது,