நேரு குடும்பம் இல்லாத காங்கிரஸ் தலைவர்! ராகுல்காந்தி முடிவு
மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்வதில் உறுதியாக உள்ளாராம். மேலும் நேரு குடும்பத்தை சேர்ந்த யாரும் இனிமேல் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருக்க வேண்டாம் என்றும் அவர் கருதுகிறாராம்
நேரு குடும்பத்தை தவிர்த்து வேறொருவர் தான் காங்கிரஸ் தலைவராக இருக்க வேண்டும் என ராகுல் முடிவெடுத்துவிட்டதாகவும், அதனால் ராகுல் நிச்சயம் அவரது பதவியை ராஜினாமா செய்வார் என்றும், அதற்கு முதன்மை காரணம் அவர் வாரிசு அரசியலை முற்றிலும் விரும்பவில்லை என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன