நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்க முடியாது: ஐகோர்ட்

நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்க முடியாது: ஐகோர்ட்

தமிழகத்தில் மணல் கடத்தல் என்பதற்கு முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் மணல் கடத்தலை கட்டுப்படுத்த சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது மணல் கடத்தலையும், இதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும் மணல் கடத்தலுக்கு உதவும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையுடன் குண்டாசும் தேவை என்றும் சென்னை ஐகோர்ட் அதிரடி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது.

மேலும் ‘மணல் கடத்த உதவும் அரசு அதிகாரிகள் மீது குண்டாஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சுற்றறிக்கை விடவேண்டும் என்றும், இந்த சுற்றறிக்கை வரும் அக்டோபர் 3ஆம் தேதிக்குள் அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவால் தமிழகத்தில் மணல் கடத்தல் கட்டுப்படுத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

Leave a Reply