நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் கடைசி பந்தில் வெற்றிபெற ஒருரன் தேவை என்ற நிலையில் இருந்த சிஎஸ்கே அணியின் ஜடேஜா அடித்த சிக்ஸரால் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் கடைசி பந்தில் ஏற்கனவே இரண்டு முறை சிக்சர் அடித்து அணிக்கு ஜடேஜா வெற்றியை தேடித் தந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த 2018 ஆம் ஆண்டு வினய்குமார் பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்சர் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்
அதேபோல் 2019ஆம் ஆண்டு பியூஸ் சாவ்லா பந்தை சிக்சர் அடித்து அணிக்கு வெற்றி பெற்று தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி 2009 ஆம் ஆண்டு ரோகித் சர்மா, 2011 ஆம் ஆண்டு அம்பத்தி ராயுடு, 2012ஆம் ஆண்டு பிராவோ ஆகியவர்களும் இதற்கு முன்னர் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து அணிக்கு தங்கள் தங்களுடைய அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது