ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர்: முன்மொழிந்த ஸ்டாலினுக்கு கிடைக்குமா ஆதரவு?

ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர்: முன்மொழிந்த ஸ்டாலினுக்கு கிடைக்குமா ஆதரவு?

நேற்று முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழா சென்னையில் நடந்தது. இதனையடுத்து ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதாக அறிவித்தார். காங்கிரஸில் கூட்டணி கட்சிகளூம், ஏன் காங்கிரஸ் கட்சியே இன்னும் பிரதமர் வேட்பாளரை அறிவிக்காத நிலையில் திமுக தலைவரின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் ஸ்டாலின் மேலும் பேசியதாவது:

நான் இன்று மிகுந்த மகிழ்ச்சியில் பூரித்து போயிருக்கிறேன். திமுக அரசியல் வரலாற்றில் இன்று முக்கியமான நாள் மட்டுமல்ல, என்னுடைய வாழ்விலும் மறக்க முடியாத நாள். தமிழர்களின் வாழ்விலும், வளர்ச்சியிலும் இன்று முக்கியமான, மறக்க முடியாத நாள்

வேறுபாடற்ற இந்தியாவை உருவாக்க நாம் இங்கு கூடியிருக்கிறோம். மோடியின் ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. சாடிஸ்ட் பிரதமராக செயல்பட்டு கொண்டுருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதுமட்டுமின்றி தன்னையே ரிசர்வ் வங்கியாக, தன்னையே வருமான வரித்துறையாக நினைத்துக் கொண்டிருக்கிறார் மோடி

கருணாநிதியை நினைவில் வைத்து தமிழக மக்கள் பாஜகவை தோற்கடிக்க வேண்டும். இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் அரசை அனுமதிக்க கூடாது.

ராகுல் காந்தியை தான் பிரதமராக்க முன்மொழிகிறேன். இந்திய நாட்டை ராகுல்காந்தி காப்பாற்ற வேண்டும். மேடையில் மற்ற தலைவர்களும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஆதரித்து அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டும்’ என்று மு.க.ஸ்டாலின் பேசினார்

Leave a Reply