நேற்று டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இந்த போட்டியில் டெல்லியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் ஆனா ரிஷப் பண்ட் விளையாடவில்லை
முந்தைய போட்டியில் விளையாடியபோது அவருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து ஒரு வாரம் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவர் நேற்றைய போட்டியில் விளையாடவில்லை என கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்
நேற்றைய போட்டியில் டெல்லி அணி தோல்வி அடைந்ததற்கு ரிஷப் பண்ட் இல்லாததும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது