நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தாலும் விராத் கோஹ்லி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
நேற்றைய ஆட்டத்தில் விராத் கோஹ்லி ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் மொத்தம் 22,000 ரன்களை கடந்துள்ளார்.
இதற்கு முன்னனதாக ராகுல் டிராவிட் சச்சின் ஆகிய இந்திய வீரர்களும், குமார் சங்கக்கரா, பாண்டிங், ஜெயவர்த்தனே, கல்லிஸ் மற்றும் லாரா ஆகிய சர்வதேச வீரர்களும் 22,000 ரன்களை கடந்துள்ளனர்.
அதிக ரன்கள் பட்டியலில் சச்சின் 34,357 ரன்களுடன் முன்னிலையில் உள்ளார்