நைஜீரிய குற்றவாளியின் கையில் ஆதார் அட்டை: அதிர்ச்சியில் போலீசார்
ஆதார் அட்டை என்பது இந்திய குடிமகன்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில் நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒரு குற்றவாளியிடம் ஆதார் அட்டையை குஜராத் போலீசார் கைப்பற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
அகமதாபாத் நகரில் மோசடி குற்றச்சாட்டின்பேரில் நைஜீரிய நாட்டை சேர்ந்த ஜாக்சன் என்பவர் உள்பட ஆறு பேர் கைது செய்தனர். இவர்களில் ஜாக்சனிடம் போலீசார் விசாரணை செய்தபோது அவரிடம் ஆதார் அட்டை இருந்துள்ளது.
மும்பையை முகவரியாக கொண்டு அவருடைய செல்போன் எண்ணும் பதிவு செய்யப்பட்டு அவரிடம் இருந்த ஆதார் அட்டையை பார்த்து போலிசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.