நோபல் பரிசு பெற எனக்கு தகுதியில்லை: இம்ரான்கான்
பாகிஸ்தான் ராணுவத்தினர்களால் கைது செய்யபட்ட இந்திய வான்படை வீரர் அபிநந்தனை விடுதலை செய்ய மனிதாபிமான அடிப்படையில் ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன
இதற்கு தனது டுவிட்டரில் கருத்து கூறிய இம்ரான்கான், ‘நான் நோபல் பரிசை பெற தகுதியானவன் இல்லை. காஷ்மீர் மக்களின் விருப்பத்தை யார் பூர்த்தி செய்கின்றார்களோ, காஷ்மீரில் அமைதி திரும்ப யார் முயற்சி எடுத்து அதில் வெற்றி பெறுகின்றார்களோ அவர்களுக்கு நோபல் பரிசு கொடுங்கள்’ என்று கூறியுள்ளார்.
I am not worthy of the Nobel Peace prize. The person worthy of this would be the one who solves the Kashmir dispute according to the wishes of the Kashmiri people and paves the way for peace & human development in the subcontinent.
— Imran Khan (@ImranKhanPTI) March 4, 2019