ன்.டி.ஆர் மனைவி மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகர்!
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதி மீது கோட்டி என்ற நடிகர் காவல்நிலையத்தில் பாலியல் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
65 வயதான லட்சுமி பார்வதி தற்போது ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் உள்ளார். இவர் மீது நடிகர் கோட்டி அளித்த புகாரில் கூறியதாவது: லட்சுமி பார்வதி எனது குடும்ப நண்பர். கடந்த 18 மாதங்களாக என்னை காதலிப்பதாக வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி வருகிறார்.
மேலும், ஆபாச இணையதள தொடர்புகளையும் அனுப்பி வருகிறார். அவரது ஆசைக்கு இணங்கினால், ஒய்.எஸ்.ஆர் கட்சியில் பொறுப்பு வாங்கி தருவதாக கூறி, என்னை பாலியல் தொல்லைக்கு வற்புறுத்துகிறார். மீறினால் பயங்கர விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என்று மிரட்டுகிறார். இவ்வாறு நடிகர் கோட்டி தனது புகாரில் கூறியுள்ளார்.