பகவான் என்பதன் பொருள்?
பகவான் என்பதை பசும்+ஆன் என்று பிரிக்கலாம். பசும் என்றால் ஆறு. ஆன் என்றால் உடையவன்.
நானே எல்லாம் என்கிற ஞானம் உலகத்தை எப்படி வேண்டுமானாலும் ஆட்டிப் படைக்கும் பலம், உலகிலுள்ள செல்வத்துக்கெல்லாம் சொந்தமாகிய ஐஸ்வர்யம், எதையும் வெற்றி கொள்ளும் வீரியம் அல்லது தைரியம், உலகத்திலுள்ள எல்லக கிரகங்கள், பொருட்களை அந்தந்த இடத்தில் இருந்து மாறவிடாமல் செய்யும் ஆற்றல், சூரிய, சந்திர நட்சத்திரங்கள் என ஒளிவீசும் தேஜஸ் என்ற பிரகாசம் ஆகியவை அவனது ஆறு குணங்களாகும்.
மொத்தத்தில் ஞானம், பலம், வீரியம், ஐஸ்வர்யம், ஆற்றல், தேஜஸ் ஆகிய ஆறு குணங்களுக்கு அதிபதி என்பதே என்பதே பகவான் என்பதன் பொருள்.