பக்கவிளைவுகள் இல்லாத பெயின் கில்லர்: அமெரிக்க விஞ்ஞானின்கள் கண்டுபிடிப்பு
வலி நிவாரணை என்று அழைக்கப்படும் பெயின் கில்லர் மாத்திரைகளால் பக்கவிளைவுகள் அதிகம் என மருத்துவர்கள் எச்சரித்து வரும் நிலையில் பக்கவிளைவுகளை இல்லாத பெயின் கில்லரை அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றிகரமான கண்டுபிடித்துள்ளனர்.
ஏடி- 121 என்னும் இந்த புதிய பெயின் கில்லர், மார்பின் என்னும் பெயின் கில்லரை விட அதிக சக்தி வாய்ந்தது என்றும், இதை பயன்படுத்தும் நபர்களுக்கு பக்கவிளைவுகளை இருக்காது என்றும் அதேபோல் மார்பினைப் போன்ல போதையினை ஏற்படுத்தி மக்களை அடிமைப்படுத்தாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதை சோதனை செய்ததில் முழு வெற்றி கிடைத்துள்ளதாகவும், இதன் கண்டுபிடிப்பு ஒரு புது மைல்கல் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.