பங்குச் சந்தை முதலீட்டில் ஜெயிக்க… வாரன் பஃபெட் சொல்லும் 
7 வழிகள்!

பங்குச் சந்தை முதலீட்டில் ஜெயிக்க… வாரன் பஃபெட் சொல்லும் 
7 வழிகள்!

1
1 ஒரு பங்கின் விலை தற்காலிகமாக ஏறுவதைப் பார்க்காமல் அந்த நிறுவனத்தின் தற்போதைய பலத்தையும், எதிர்கால வளர்ச்சியையும் கருத்தில்கொண்டு முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும்.

2 ஒரு பங்கை வாங்கும் போது, அந்த நிறுவனத் தையே வாங்குவதாக நினைத்துச் செயல்பட வேண்டும். ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை நீண்ட கால நோக்கில் பார்க்க வேண்டும். குறைந்தது 10 வருடங்கள் ஒரு பங்கை வைத்திருக்க வேண்டும். 10 வருடங்கள் வைத்திருக்க முடியாது என்றால், பத்து நிமிடம் கூட வைத்திருக்கக் கூடாது.

3 முதலீடு செய்யும்முன் பலதரப்பட்ட பங்குகளை அலசி ஆராய வேண்டும். ஒரு தனிநபர் அவ்வாறு செய்வது கடினம். எனவே, தகுந்த முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து முதலீட்டு முடிவுகளை மேற் கொள்ள வேண்டும். முதலீட்டு ஆலோசகரை தேர்வுச் செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

4 முதலீடுகளையும் அதன் வருமானத்தையும், குறித்த கால இடைவெளியில் அலசி ஆராய வேண்டும். முதலீடு களை நிர்வாகம் செய்யும் திறமை அவசியம் வேண்டும்.

5 சில பங்குகள் அதிக முதலீட்டாளர்களைக் கவரும்படியாக இருக்கும். அது மாதிரியான பங்குகளில் அதிக ஏற்ற இறக்கங்கள் வர வாய்ப்புள்ளது. எனவே, அது மாதிரியான பங்குகளை முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டும்.

6 ஒரு குறிப்பிட்ட பங்கிலிருந்து எவ்வளவு காலத்தில், எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை ஆராய்ந்த பின்னரே முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் வரிக்குப் பிந்தைய வருமானம் 10 சதவிகிதமாவது இருக்க வேண்டும்.

7 ஒரு பங்கு 50% விலை இறங்கினால், மீண்டும் விலை உயரும் என்று சில முதலீட்டாளர் கள் காத்திருப்பார்கள். அந்த நஷ்டத்தை ஈடுகட்ட லாபத்தில் உள்ள பங்குகளை விற்பார்கள். ஆனால், எந்தப் பங்கு நஷ்டத்தில் உள்ளதோ, அந்தப் பங்கை முதலில் விற்பதே புத்திசாலித்தனம்!

Leave a Reply