பசும்பொன்னில் தேவர் சிலைக்கு தங்கக்கவசம் அணிவித்த ஜெயலலிதா.

கடந்த 2010¬õ ஆண்டு தமிழக முதல்வர்  ஜெயலலிதா பசும்பொன் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திÂபோது அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள், நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா,  அ.தி.மு.க. சார்பில் தங்க கவசம் அணிவிக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன்படி இன்று காலை தேவர் சிலைக்கு தங்காக்கவசம் அணியப்பட்டது.

இந்த விழாவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பகல் 12.35 மணிக்கு மதுரை வந்தார். விமான நிலையத்தில் கலெக்டர் சுப்பிரமணியன், மேயர் ராஜன்செல்லப்பா, போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர், மாநகராட்சி கமிஷனர் கிரண்குராலா, போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பகல் 1.30 மணிக்கு பசும்பொன் வந்Ð, அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த தங்க கவசத்திற்கு புனித நீர் ஊற்றினார். அதன்பிறகு ரோஜா மலர்களை தூவி தங்க கவசங்களை கோவை காமாட்சிபுரி ஆதீனத்திடம் ஜெயலலிதா வழங்க, அதனை முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அவர் அணிவித்தார். அதன்பின்னர் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு முத்துராமலிங்கத்தேவருக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் முத்துராமலிங்க தேவர் குறித்து ஜெயலலிதா பேசியபோது, நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட தேவர் வழியில் அதிமுக தொடர்ந்து செயலாற்றும் என்று கூறினார்.

 

Leave a Reply