பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடையா? சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடையா? சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் சற்றுமுன்னர் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மாசு குறைவாக இருக்கும் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்த சுப்ரீம் கோர்ட், பட்டாசு விற்பனைக்கும் உற்பத்திக்கும் நாடு முழுவதும் தடை இல்லை என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பட்டாசு விற்பனைக்கு நாடு முழுக்க தடை விதிக்க வேண்டும் என்று வாதாடிய நிலையில், பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் அதை சார்ந்துள்ள தொழிலாளர்களின் நலனை கருதி பட்டாசு விற்பனைக்கு மொத்தமாக தடை விதிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் எதிர்தரப்பினர் வாதாடினர்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட் பட்டாசு உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை இல்லை என்று தீர்ப்பு அளித்தது. இருப்பினும் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி

குறைந்த அளவிலான புகை வெளியிடும் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும், லைசென்ஸ் உள்ளவர்கள் மட்டுமே பட்டாசு விற்பனையில் ஈடுபட வேண்டும் என்றும், ஆன்லைனில் பட்டாசு விற்பனை கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட் நிபந்தனைகளை விதித்துள்ளது.

Leave a Reply