பட்டாசு வெடிக்க நிபந்தனை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

பட்டாசு வெடிக்க நிபந்தனை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்க அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரத்துக்கு பதில் கூடுதல் நேரம் ஒதுக்க கோரி தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது

தமிழக அரசு தனது மனுவில் தீபாவளி அன்று காலை 4 மணி முதல் மாலை 6 மணிவரை பட்டாசு வெடிக்க அனுமதி கோரியுள்ளது. தீபாவளி அன்று காலை எழுந்தவுடன் எண்ணெய் குளியல் குளித்து புத்தாடை அணிந்து அதன் பின்னர் பட்டாசு வெடிக்கும் பழக்கமுள்ள நிலையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இந்த மனுமீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட் வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply