பணத்தை திருப்பி கொடுப்பதா? பிகில் அதிர்ச்சியில் திரையரங்கு உரிமையாளர்கள்!

பணத்தை திருப்பி கொடுப்பதா? பிகில் அதிர்ச்சியில் திரையரங்கு உரிமையாளர்கள்!

நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி நாளை மறுநாள் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படும் என அறிவிக்கபட்டு அதற்கான டிக்கெட்டுக்கள் ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இன்னும் சிறப்புக்காட்சி உண்டா? என்பது குறித்த உறுதிமொழி வெளியாகவில்லை

இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள், ‘தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளில் விடுமுறையை பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது

ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் அவற்றை தவறாக பயன்படுத்தி அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுவதால் சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. தீபாவளி சிறப்பு காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை ரத்து செய்து, பணத்தினை திருப்பிக்கொடுக்க வலியுறுத்தி உள்ளோம். பிகில் படம் மட்டுமல்ல எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த பேட்டியால் அதிகாலை காட்சிக்கு டிக்கெட் எடுத்தவர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.,

Leave a Reply