பணமதிப்பு நீக்க நடவடிக்கை ரிசர்வ் வங்கி கவர்னருக்கு நாடாளுமன்ற குழு சம்மன்: ஏப்ரல் 20-ல் விளக்கம் அளிக்க உத்தரவு
பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க வேண் டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு நாடாளுமன்ற குழு சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த நவம்பர் 8-ம் தேதி உயர் மதிப்பிலான 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வங்கிகளில் நவம்பர் 10-ம் தேதி முதல் பழைய நோட்டுகள் பெறப்பட்டன. இவ்விதம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை எவ்வளவு? பண மீட்பு நடவடிக்கையில் எந்த அளவுக்கு முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்குமாறு நாடாளுமன்ற குழு கோரியுள்ளது.
நாடாளுமன்றத்தின் நிதித்துறை நிலைக் குழு முன்னாள் மத்திய அமைச்சர் எம். வீரப்ப மொய்லி தலைமையில் கூடியது. இக்குழு ஏப்ரல் 20-ம் தேதி விளக்கம் அளிக்கலாம் என ஆர்பிஐ கவர்னருக்கு உத்தரவிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தவிர, பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ், நிதி சேவைகள் துறை செயலர் அஞ்சலி சௌப் துகல் ஆகியோரும் நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் மீட்பு ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்த இக்குழு ரிசர்வ் வங்கி மற்றும் நிதித்துறை அதிகாரிகள் ஏப்ரல் 20-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் நிதித்துறை செயலர்கள் விளக்கம் அளித்த பிறகு இக்குழு தனது இறுதி அறிக்கையைத் தயார் செய்யும் என தெரிகிறது. ஏப்ரல் 20-ம் தேதி ஆர்பிஐ கவர்னர் வேறு பணி நிமித்தமாக இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லையெனில் வேறொரு தேதியைக் கூறலாம் என நாடாளுமன்ற குழு குறிப்பிட்டுள்ளது.
பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய கரன்சிகள் விடுவிக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக் கத்தையும் இக்குழு கேட்டறியும்.
கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய நோட்டுகள் குறித்த விவரத்தை ஆர்பிஐ கவர் னர் உர்ஜித் படேல் தரவில்லை. ரூ. 9.2 லட்சம் கோடி அளவுக்கு புதிய நோட்டுகள் விடுவிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற குழுவினர் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது தினசரி ஒவ்வொரு விதி களாக பிறப்பித்து மக்களை அலைக் கழித்தது ஏன்? என நிதித்துறை அதிகாரிகள், ஆர்பிஐ கவர்னரிடம் கேள்வியெழுப்புவார்கள் என தெரிகிறது.
கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தின்போது உறுப்பினர்களின் சில சிக்கலான கேள்விகளுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கவர்னர் உர்ஜித் படேலுக்கு உதவியதாகத் தெரிகிறது.
நாடாளுமன்ற நிதிக் குழுவில் பாஜக உறுப்பினர்கள் நிஷிகாந்த் துபே, கிரீட் சோமையா, சமாஜ வாதி கட்சியைச் சேர்ந்த நரேஷ் அகர்வால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சதீஷ் சந்திர மிஸ்ரா ஆகியோர் உள்ளிட்ட 31 பேர் உள்ளனர்.
நவம்பர் 7, 2016 தேதியிட்ட கடிதத்தில் அரசு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை அழிக்க ஆலோ சனை கூறியுள்ளதாக தெரிவித்துள் ளது. இதற்கு அடுத்த நாள் இந்த நடவடிக்கைக்கு ஆர்பிஐ இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த சில மணி நேரங்களிலேயே பிரதமர் மோடி தனது தொலைக் காட்சி உரையின்போது இத்தகைய அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டார்.