பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்த அதிரடி முடிவு
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் என இரண்டு தேசிய கட்சிகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற அரவிந்த் கேஜரிவால் வரும் 16ஆம் தேதி பதவியேற்க உள்ளார்
இந்த பதவியேற்பு விழாவுக்கு முக ஸ்டாலின், மம்தா பானர்ஜி உள்பட பல முக்கிய தலைவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது
இந்த நிலையில் அரவிந்த் கேஜரிவால் பதவியேற்பு விழாவில் மற்ற மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் யாருக்கும் அழைப்பு கிடையாது என்றும் மக்களுக்கு மட்டுமே அழைப்பு என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் கோபால்ராய் அவர்கள் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பல அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது