பத்தாம் வகுப்பு தேர்வுகள் மீண்டும் தள்ளி வைக்கப்படுகிறதா?

அதிர்ச்சித் தகவல்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு நான்கு முறை நீட்டிக்கப்பட்டது. தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவு நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் என சமீபத்தில் தமிழக அரசின் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆனால் ஊரடங்கு நேரத்தில் எவ்வாறு தேர்வை நடத்த முடியும் என்றும் எனவே தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்றும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கோரி வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்தே பத்தாம் வகுப்பு தேர்வு தமிழகத்தில் நடைபெறுமா? அல்லது தள்ளிப் போகுமா? என்பது தெரியவரும்

Leave a Reply