பத்திரிகையாளர்களை கேவலப்படுத்துகிறார் பிரேமலதா: சந்திரகுமார்

பத்திரிகையாளர்களை கேவலப்படுத்துகிறார் பிரேமலதா: சந்திரகுமார்

இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது பத்திரிகை நிருபர் ஒருவரை ஒருமையில் பேசியதால் கடும் கண்டனத்துக்கு ஆளான தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா
பத்திரிகையாளர்களை கேவலப்படுத்துவதாக தேமுதிகவில் இருந்து பிரிந்து திமுகவில் இணைந்த சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த் பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல பேசி, பத்திரிகையாளர்களை கேவலப்படுத்துவதாகவும், கருணாநிதியை சந்திக்க ஸ்டாலின் அனுமதி மறுத்ததாக திரும்ப திரும்ப பிரேமலதா பொய் கூறி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

பூட்டிய அறையில் சிக்கிய எலி போல பிரேமலதா விஜயகாந்த் விரக்தியில் இருப்பதாகவும், திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் 45 நிமிடங்கள் அமர்ந்து பேசிவிட்டு, அதை தற்போது மறுக்கிறார்கள் என்றும் சந்திரகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

Leave a Reply