பத்தே நிமிடங்களில் கல்விக்கடன் வாங்கித்தந்த கலெக்டர்: ஒரு ஆச்சரிய தகவல்

பத்தே நிமிடங்களில் கல்விக்கடன் வாங்கித்தந்த கலெக்டர்: ஒரு ஆச்சரிய தகவல்

மருத்துவம் படிக்க முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவி ஒருவரூக்கு, வங்கியில் பேசி பத்தே நிமிடங்களில் கல்விக்கடன் ஏற்பாடு செய்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த சாஹானஸ் பேகம் என்பவர், பல் மருத்துவ படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். குடும்ப வறுமை காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். இதுகுறித்த செய்திகள் பத்திரிகைகளில் வெளியானது.

இந்த செய்தியை பார்த்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, உடனடியாக மாணவி சாஹானஸ் பேகத்தை கொண்டு அவருக்கு சேலம் இந்தியன் வங்கியில் 10 நிமிடங்களில் கல்விக்கடனுக்கு ஏற்பாடு செய்தார். தனது மருத்துவ கனவு நிறைவேறியதை கண்டு மாணவி ஆட்சியர் ரோகிணியை செய்த உதவிகளுக்காக அவரிடம் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

 

Leave a Reply