பத்மசேஷாத்ரி பள்ளி முதல்வர் கீதா விசாரணைக்காக ஆஜர்!

சென்னையில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த ராஜகோபாலன் என்பவர் மாணவிகளிடம் தவறான நோக்கத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து கைது செய்யப்பட்டார்

அவர் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்களிடம் முதல்வரிடமும் விசாரணை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது

இந்த நிலையில் சற்று முன் பத்மா சேஷாத்திரி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் விவகாரத்தில் அப்பள்ளியின் முதல்வர் கீதா விசாரணைக்காக சென்னை தி நகர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி உள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது