பத்மாவதி படத்திற்கு ஆதரவு கொடுத்த முதல்வரின் காது, மூக்குக்கு பரிசு அறிவிப்பு
இயக்குனர் பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடித்த ‘பத்மாவதி’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒருசிலர் தீபிகா, பன்சாலி தலைக்கு கோடிக்கணக்கில் பரிசு அறிவிப்பையும் செய்துள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் மேற்கு வங்க மாநில முதல்வர், மம்தா பானர்ஜி, ‘பத்மாவதி’ திரைப்படத்திற்கு ஆதரவு கொடுத்தது மட்டுமின்றி மேற்கு வங்கத்தில், பத்மாவதி திரைப்படத்தை திரையிட அனுமதி அளிப்பதாகவும் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த பத்மாவதி படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ராஜபுத்ர சமுதாய தலைவர் ஒருவர் மம்தா பானர்ஜியின் மூக்கு, காதை அறுப்பவர்களுக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.