பப்ஜி தடை எதிரொலி: 21 வயது மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை!

சமீபத்தில் மத்திய அரசு பப்ஜி உட்பட 181 செயலிகளை தடை செய்தது என்பது தெரிந்ததே இதனை அடுத்து இந்த தடைக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்தனர்

பப்ஜி உள்பட பல சீன நாட்டின் செயலிகளின் தடைக்கு பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் பப்ஜி விளையாட்டில் அடிமையான ஒரு சில மாணவர்கள் மட்டும் இந்த பார்த்து தடையால் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நாடியா என்ற மாவட்டத்தில் 21 வயது மாணவன் பப்ஜி விளையாட முடியவில்லையே என்ற மன வருத்தத்தில் தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்

இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் பப்ஜி தடையால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply