பப்ஜி விளையாட பணம் தராததால் கடலில் விழுந்து உயிரை மாய்த்த மாணவன்:

அதிர்ச்சி தகவல்

கன்னியாகுமரி அருகே பப்ஜி விளையாட ரீசார்ஜ் செய்ய அவரது தந்தை பணம் தராததால் இளைஞர் ஒருவர் கடலில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பப்ஜி விளையாட்டின் மேல் இளைஞர்கள் பலர் அடிமையாகி உள்ளனர் என்பதும் 59 செயலிகளை போலவே இந்த செயலியையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருவது தெரிந்ததே

ஒரு சிலர் இந்த விளையாட்டின் விளையாடிக் கொண்டிருக்கும் போதே உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர்

இந்த நிலையில் கன்னியாகுமரியைச் சேர்ந்த பாலிடெக்னிக் முதலாமாண்டு மாணவர் ஒருவர் பப்ஜி விளையாட்டு விளையாட ரீசார்ஜ் செய்ய அவரது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவரது தந்தை பணம் கொடுக்க மறுக்கவே கோபத்துடன் வெளியேறி கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

Leave a Reply