பப்பாளி கேசரி

பப்பாளி கேசரி
Fruit-Kesari

தேவையான பொருள்கள் :

பப்பாளித் துண்டுகள் – ஒரு கிண்ணம்

ரவை – ஒரு கிண்ணம்

சர்க்கரை – ஒரு கிண்ணம்

பால் – கால் கிண்ணம்

நெய், முந்திரி – தேவையான அளவு

ஏலக்காய் – 2

செய்முறை: பப்பாளித் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு  ரவையை வறுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி முந்திரி சேர்த்து வறுக்கவும். அதன்பிறகு ஒரு கிண்ணம் ரவைக்கு 2 கிண்ணம் தண்ணீர் விட்டு கலர் பொடி,ஏலக்காய்ப் பொடி, சர்க்கரை மற்றும் அரைத்த பப்பாளி விழுதை சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் ரவையைக் கொட்டி கட்டி தட்டாமல் கிளறி விடவும். ரவை ஒன்று சேர்ந்து வெந்து கெட்டியாகி வரும்போது இறக்கவும். சுவையான பப்பாளி கேசரி தயார்.

Leave a Reply