பயணியுடன் சண்டை போட்டு பேருந்தை ஆற்றுக்குள் விட்ட டிரைவர்

பயணியுடன் சண்டை போட்டு பேருந்தை ஆற்றுக்குள் விட்ட டிரைவர்

சீனாவில் பேருந்து டிரைவர் ஒருவர் பயணியுடன் சண்டை போட்டதால் அவரது கவனம் திசை திரும்பி பேருந்தை ஆற்றுக்குள் விட்டதால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த ஞாயிறு அன்று சீனாவில் ஒரு பேருந்து சுமார் 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து யாங்ட்சீ என்ற ஆற்றின் மேலுள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது அந்த பேருந்தின் டிரைவருக்கும், பயணி ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

சண்டை மும்முரத்தில் டிரைவரின் கவனம் திரும்பியதால் திடீரென பேருந்து ஆற்றுப்பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்தது. டிரைவர் சுதாரித்து பேருந்து திருப்புவதற்குள் தடுப்புச்சுவரை மோதி பேருந்து ஆற்றில் விழுந்தது.இந்த விபத்தில் 13 பேர் பலியாகியுள்ளதாகவும் இரண்டு பேர் ஆற்றில் அடித்து சென்றுவிட்டதாகவும் சீன செய்தி நிறுவனமான சைனா டெய்லி தனது டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply