மக்களவையில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்கள் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்ய இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சமீபத்தில் மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக மூன்று மசோதாக்களை நிறைவேற்ற இருப்பதாக திட்டமிடப்பட்டது
மக்களவையில் இந்த மசோதா வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்ட போதிலும் கூட்டணிக் கட்சிகள் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்
இந்த நிலையில் மாநிலங்களவையில் இன்று இந்த மூன்று வேளாண் மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட உள்ளன மாநிலங்களவையில் தற்போது 243 எம்பிக்கள் உள்ள நிலையில் மசோதா நிறைவேற 122 எம்பிக்களின் ஆதரவு தேவை
ஆனால் பாஜக கூட்டணிக்கு 105 எம்பி மட்டுமே ஆதரவு உள்ளது. இதனால் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறுமா சந்தேகம் ஏற்பட்டுள்ளது
இருப்பினும் காங்கிரஸ் கூட்டணிக்கு 100 எம்பிக்கள் மட்டுமே ஆதரவு இருப்பதால் நடுநிலையாக இருக்கும் எம்பிக்கள் மசோதாவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது