பரோலில் வரும் சசிகலா யாரையும் பார்க்க கூடாது: தமிழக அரசின் நிபந்தனைகள்?
உடல்நலமின்றி இருக்கும் கணவர் நடராஜனை பார்க்க சசிகலா பரோலில் இன்று வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் தடையில்லா சான்று இதுவரை கிடைக்காவிட்டாலும் இன்று வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், எனவே இன்று மாலை சசிகலா சென்னைக்கு வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் பரோலில் வரும் சசிகலாவுக்கு தமிழக அரசின் பரிந்துரையின்படி 4 நிபந்தனைகள் விதிக்கபட்டுள்ளதாக தெரிகிறது. அவை
ஊடகங்களுக்கு பேட்டி வழங்கக் கூடாது
#நடராஜனை மட்டும் சந்திக்க வேண்டும்
#அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கக் கூடாது
#அரசியல் கட்சியினரையும் சந்திக்கக் கூடாது.
மேற்கண்ட நிபந்தனைகளால் தினகரன், திவாகரன் உள்பட சசிகலாவை யாரும் பார்க்க முடியாது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சசிகலா தங்குவதற்கும் நான்கு இடங்கள் ஏற்பாடுகள் செய்யபப்ட்டுள்ளன. அவை
*சென்னையை அடுத்த சிறுதாவூரில் சசிகலா குடும்பத்தினருக்கு உரிய பங்களா
*டிடிவி.தினகரனின் சகோதரர் பாஸ்கரனின் இல்லம்
*டாக்டர் வெங்கடேஷின் இல்லம்
*சென்னை தி.நகரில் இளவரசியின் மகள் இல்லம்