பறக்கும் விமானத்தில் குழந்தை பெற்ற பெண்

பறக்கும் விமானத்தில் குழந்தை பெற்ற பெண்

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கேபோன் குடியரசு என்ற நாட்டின் தலைநகரம் லிபர்வில்லேவில் இருந்து துருக்கி தலைநகரம் இஸ்தான்புல்லுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்த விமானத்தில் 21 வயது பெண் ஒருவர் பறக்கும் விமானத்தில் குழந்தை பெற்றார். தாயும் சேயும் நலமுடன் உள்ளனர்.

இந்த விமானத்தில் காங்கோ நாட்டை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் முசும்பா என்ற பெண் தனது கணவருடன் இஸ்தான்புல் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களில் திடீரென முசும்பாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்த விமான ஊழியர்கள் இடையில் விமானத்தை தரையிறக்க வழி இல்லாததால் விமானத்திலேயே முசும்பாவுக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்தனர். அவரது கணவரே டாக்டர் என்பதால் விமான ஊழியர்கள் உதவியுடன் அவரே மனைவிக்கு பிரசவம் பார்த்தார்.

விமானம் சுமார் 13ஆயிரம் உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது முசும்பா அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். விமானம் இஸ்தான்புல்லை அடைந்ததும் தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் முசும்பாவும் குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Leave a Reply