பலத்த காற்றுடன் கூடிய கனமழை: சென்னை வானிலை மையம் அறிவிப்பு
வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகம் மற்றும் மேற்கு உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது
திருச்சி, மதுரை, திண்டுக்கல், நாமக்கல், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் இயல்பை விட அதிகரித்து காணப்படும் என்றும் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது
அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் இன்னும் வெயிலின் கொடுமை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்