நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால் பள்ளிகளை இனி தாராளமாக திறக்கலாம் என எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் அவர்கள் தெரிவித்துள்ளார்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் இதனால் மாணவர்களின் கல்வி, மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதால் பள்ளிகளை தாராளமாக திறக்கலாம் என எய்ம்ஸ் இயக்குனர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். இதனை அடுத்து பள்ளிகள் திறக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது