அக்டோபர் 1ஆம் தேதி முதல் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது
ஆனால் திடீரென நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படாது என்றும் அது குறித்த அரசாணையை நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்தார்
இது ஒரு நடிகரும் திமுக இளைஞர் அணியின் செயலாளருமான உதயநிதி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
அக்.1 முதல் பள்ளிகள் திறப்பென அறிவித்த அடிமை அரசு திறக்கவில்லை என்று மீண்டுமொரு U-Turn அடித்துள்ளது. அம்மையார் காலத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர்கள்தான் தூக்கியடிக்கப்பட்டனர். அடிமை அரசோ பள்ளிக்கல்வித்துறையையே பந்தாடுகிறது. கற்றறிந்த அதிகாரிகளாவது மாணவர் எதிர்காலம் காக்க வேண்டும்.