ஆந்திர மாநிலத்தில் கடந்த 2-ம் தேதி ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்ட நான்கே நாட்களில் 829 ஆசிரியர்களுக்கும் 575 மாணவர்களுக்கும் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் அம்மாநில அரசு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது
மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து மாணவர்களின் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் பள்ளிகள் திறந்தது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் இதனால் ஆந்திர மாநிலத்தில் பள்ளிகளை மூட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
அண்டை மாநிலத்தில் பள்ளிகள் திறந்ததால் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததால் தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது