பள்ளி பாடத்திட்டத்தில் பேரிடர் மேலாண்மை பாடங்கள்: சென்னை பல்கலை முடிவு

பள்ளி பாடத்திட்டத்தில் பேரிடர் மேலாண்மை பாடங்கள்: சென்னை பல்கலை முடிவு

பள்ளி பாடத்திட்டத்தில் பேரிடர் மேலாண்மை சார்ந்த உளவியல் பாடங்களை சேர்க்க அரசுக்கு பரிந்துரை செய்ய இருப்பதாக சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சார்பில் பேரிடர் காலங்களில் பள்ளி மாணவர்களின் பங்கு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புவியியல் துறை பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, பேரிடர் காலங்களில் மாணவர்கள் உளவியல் ரீதியாக அதிக பாதிப்பு அடைவதாகவும், அதிலிருந்து மீள நீண்ட காலம் எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

இதனை கருத்தில் கொண்டு பள்ளி பாடத்திட்டத்தில் பேரிடர் மேலாண்மை சார்ந்த உளவியல் பாடங்களை சேர்க்க அரசுக்கு பரிந்துரை செய்ய இருப்பதாக அவர் கூறினார்.

Leave a Reply