பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்

பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்து கொண்டிருக்கும் நிலையில் பக்தர்களின் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மலை ஏறுவதற்கு ரோப்கார் சேவை ஆரம்பிக்கப்பட்டது

இந்த ரோப்கார் சேவை பக்தர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணி காரணமாக வரும் 29ஆம் தேதி முதல் 45 நாட்களுக்கு ரோப்கார் சேவை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது

இதனால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் இருப்பினும் பராமரிப்பிற்கு பின் ரோப்கார் சேவை நவீன வகையில் செயல்படும் என்பதால் பக்தர்கள் ஆறுதல் அடைந்து உள்ளனர். இந்த 45 நாட்களும் பக்தர்கள் மலை மீது கால் நடையாக ஏரியை முருகனை தரிசிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply