பழிக்கு பழி வாங்குவோம்: சிஆர்பிஎஃப் ஆவேசம்

பழிக்கு பழி வாங்குவோம்: சிஆர்பிஎஃப் ஆவேசம்

நேற்று பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பு ஒன்று நடத்திய மனிதவெடிகுண்டு தாகுதலில் மத்திய பாதுகாப்பு படையினர் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலால் நாடே அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு பழிக்கு பழி வாங்குவோம் என சிஆர்பிஎஃப், டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்த தாக்குதலை நாங்கள் மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம். வீரமரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம். இந்த கொடூர தாக்குதலுக்கு விரைவில் பழி தீர்க்கப்படும்’ என சிஆர்பிஎஃப், டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது

முன்னதாக இந்த தாக்குதல் குறித்து கருத்து கூறிய பிரதமர் மோடி, ‘எதிரிகள் மிகப்பெரிய தவறை இழைத்து விட்டார்கள். இதற்கு அவர்கள் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்’ என கூறினார்.

 

Leave a Reply