பழ.கருப்பையா ஒரு வியாபாரி: அமைச்சர் காமராஜ் கடும் தாக்கு
கடந்த சில நாட்களாக தமிழக அமைச்சர்கள் ‘சர்கார்’ படக்குழுவினர்களை விமர்சனம் செய்து கொண்டிருந்த நிலைஅயில் தற்போது அமைச்சர் காமராஜ், அந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்த பழ.கருப்பையாவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டியின்போது அவர் கூரியதாவது: ‘அதிமுகவின் அமைச்சர்கள் அனைவருமே அயோக்கியர்கள் என்று கூறினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் காமராஜ், ‘பழ.கருப்பையா ஒரு வியாபாரி, நாக்கை வைத்து அவர் வியாபாரம் செய்பவர். பழ.கருப்பையா அதிமுகவில் இருந்தபோது எங்களிடமே பணம் வாங்கி கொண்டு தான் மேடையில் பேசுவார். அமைச்சர்களில் யார் நல்லவர் என பழ.கருபாபையா கேட்கிறார். நான் சொல்கிறேன் அதிமுகவின் அமைச்சர்கள் அனைவருமே யோக்கியர்கள் தான் என மார்தட்டி சொல்வேன். வேணுமென்றால் நாளை நான் நேராக வருகிறேன். இரண்டு பேரும் ஒரே இடத்தில் விவாதிக்க தயாரா? என அமைச்சர் காமராஜ் கேள்வியும் எழுப்பியுள்ளார்