பாகிஸ்தானின் புதிய அதிபர் இவர்தான்
பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக சமீபத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்நாட்டின் புதிய அதிபரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில், நேற்று அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், இம்ரான் கானின் கட்சி சார்பில் ஆரிஃப் ஆல்வியும், எதிர்க்கட்சிகளின் சார்பில், முத்தஹிதா அமலும் போட்டியிட்டனர். பஞ்சாப், சிந்து, ஹைபர், பலுசிஸ்தான் உள்ளிட்ட நான்கு மாகாணங்களின் சட்டசபைகளிலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலும் தேர்தல் நடைபெற்றது.
மொத்தமாக பதிவான ஆயிரத்து 100 வாக்குகளில், பிடிஐ கட்சி வேட்பாளர் ஆர்ஃப் ஆல்வி, 353 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வரும் ஒன்பதாம் தேதி, பாகிஸ்தான் அதிபராக ஆர்ஃப் ஆல்வி பதவியேற்கவுள்ளார். வெற்றிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆரிஃப், தனக்கு வாய்ப்பளித்த பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.