பாகிஸ்தான் செல்லும் பிரதமர் மோடி, வரும்போது தீவிரவாதிகளையும் அழைத்து வரவேண்டும். அஸம்கான் பேட்டி

azamkhanசமீபத்தில் ரஷ்யா நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்திருந்த பாரத பிரதமர் மோடி, ரஷ்யாவின் உஃபா நகரில் நடந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் நவாப் ஷெரிப்பை நேரில் சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடியை பாகிஸ்தானுக்கு வர நவாப் ஷெரிப் அழைத்து விடுத்தார். அவருடைய கோரிக்கையை ஏற்ற பிரதமர் மோடி, பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் பங்கேற்பதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த நாடாளுமன்ற விவகாரம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் அஸம்கான் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட குற்றத்துக்காக தேடப்படும் தீவிரவாதிகள் பலர் பாகிஸ்தானில் உள்ளனர். சார்க் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் செல்லும் பிரதமர் மோடி, திரும்பி வரும் போது தனது விமானத்திலேயே அந்த தீவிரவாதிகளை அழைத்து வந்துவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காந்தகாருக்கு கடத்தப்பட்டபோது, மவுலானா மசூத் அசார் உட்பட 3 முக்கிய தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களை சிறப்பு விமானத்தில் அழைத்து சென்று காந்தகாரில் விடுவித்து, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை மீட்டு வந்தனர். அந்த சம்பவத்தை அஸம்கான் குறிப்பிட்டு பேசினார்.

மும்பையில் 26/11 அன்று தாக்குதல் நடத்தியதில் முக்கிய தீவிரவாதி ஜகியூர் ரஹ்மான் லக்வி, ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத் உட்பட இந்தியாவில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட பல தீவிரவாதிகளை ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரிவருகிறது. அத்துடன் மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராகிமையும் ஒப்படைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாகிஸ்தானை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply