பாகிஸ்தான் பிரதமரிடம் பாடம் கற்க சொல்வதா? குஷ்புவுக்கு கண்டனம்

பாகிஸ்தான் பிரதமரிடம் பாடம் கற்க சொல்வதா? குஷ்புவுக்கு கண்டனம்

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய அபிநந்தனை ந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான், “அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில்விடுவிக்கப்படுவார்” என்று அறிவித்த நிலையில் இந்த அறிவிப்புக்கு அனைத்துத் தரப்பிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன.

இம்ரான்கானின் இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது ‘பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு ஏதேனும் உள்ளதா? நம் பிரதமருக்கு ஒரு பாடம் அவசியம்’ என்றும் இன்னொரு டுவீட்டில் ’ விங் கமாண்டர் அபிநந்தன் அவர்களே நீங்கள் தாய்நாடு திரும்புவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். இம்ரான் கானின் அன்பான செய்கைக்கு நன்றி’என்றும் பதிவிட்டார்.

குஷ்புவின் இந்த இரண்டு டுவீட்களுக்கும் ஆதரவும் எதிர்ப்பும் வந்தாலும் கண்டனங்கள் அதிகமாகவே எழுந்திருக்கின்றன. பா.ஜனதா மீதான தன்னுடைய காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த இன்னொரு நாட்டு பிரதமரை புகழ்வதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply