பாகிஸ்தான் பிரதமர் ஆவாரா இம்ரான்கான்?

பாகிஸ்தான் பிரதமர் ஆவாரா இம்ரான்கான்?

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனும், தெக்ரிக்-,இ- இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் ஆவார் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் மு‌ஷரப் பேட்டி அளித்துள்ளார்.

பர்வேஸ் முஷரப் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: என்னை பொறுத்த வரை பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு இம்ரான்கான் தகுதியானவர் என்றே நினைக்கின்றேன். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர் மரியம் நவாஸ் அரசியலில் முதிர்ச்சியற்றவர். இவரால் பிரதமர் பதவியில் இருந்து கொண்டு இம்ரான்கானை விட சிறப்பாக ஆட்சி நடத்த முடியாது.

இம்ரான்கானிடம் பல நல்ல தகுதிகள் உள்ளன. ஆசிப் சர்தாரி மற்றும் நவாஸ் செரீப்பைவிட இவர் சிறந்தவர் என கருதுகிறேன். பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான் ஒரு உண்மையான மனிதர். மிக குறைந்த அளவே ஊழல் குற்றச்சாட்டு இவர் மீது உள்ளது. மேலும் இவர் நிறைய வி‌ஷயங்களை கவனிக்க வேண்டும். பேச்சை குறைக்க வேண்டும்.

வெளிநாட்டில் இருந்து திரும்புவது குறித்து நான் இன்னும் முடிவு செய்ய வில்லை. பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தீர்க்க காத்திருக்கிறேன். எனவே நாடு (பாகிஸ்தான்) திரும்புவது குறித்து சில நாட்களில் முடிவெடுப்பேன்.

Leave a Reply