பாகிஸ்தான் பிரதமர் பதவி: இம்ரான்கானுக்கு திடீர் சிக்கல்
பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக வரும் 14ஆம் தேதி இம்ரான்கான் பதவியேற்பார் என்று செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அவர் பதவியேற்பதில் திடீர் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் அந்நாட்டின் 9 நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை திடீரென நிறுத்தி வைத்து உள்ளது. இதில் இம்ரான்கான் போட்டியிட்ட தொகுதியும் ஒன்றாகும். அதேபோல் இம்ரான்கான் கட்சியின் கூட்டணி கட்சியான பலுசிஸ்தான் அவாமி லீக் கட்சி போட்டியிட்ட ஒருசில தொகுதிகளின் முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தொகுதியின் முடிவுகளில் மாற்றம் ஏற்பட்டால் இம்ரான்கான் கட்சி தொகுதியின் எண்ணிக்கை குறைந்துவிடும். எனவே இந்த 9 தொகுதிகளின் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் இம்ரான்கான் பிரதமர் பதவியை ஏற்க மாட்டார் என்றே பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.