பாகிஸ்தான் ரசிகர்களால் சினிமாவை விட்டு வெளியேறும் பிரபல நடிகை

பாகிஸ்தான் ரசிகர்களால் சினிமாவை விட்டு வெளியேறும் பிரபல நடிகை

‘டங்கல்’ திரைப்படத்தில் அமீர்கான் மகளாக நடித்து தேசிய விருது பெற்ற நடிகை ஸைரா வாசிம் என்பது அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் நடிகை ஸைரா வாசிம் திரையுலகில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். தனக்கு மத ரீதியான அழுத்தங்கள் இருப்பதால் திரைப்பட துறையிலிருந்து வெளியேறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரை சேர்ந்தவரான நடிகை ஸைரா வாசிம் சமூக வலைதள பக்கத்தில், தான் முஸ்லீம் என்பதால் பெருமைப்படுவதாகவும், தனக்கு பாகிஸ்தானில் அதிக ரசிகர்கள் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார். அந்த பதிவுக்கான எதிர்வினைகளால் மன உளைச்சல் அடைந்து இந்த முடிவினை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply