பாகுபலி கதாநாயகியின் அடுத்த படம் குறித்த தகவல் !
‘ரெண்டு’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி சூர்யாவின் ‘சிங்கம்’ சூப்பர்ஸ்டாரின் ‘லிங்கா’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார் அனுஷ்கா ஷெட்டி. 2017 ஆம் ஆண்டு வெளியான இந்தியாவில் மிகப்பெரிய வசூல் படமான பாகுபலி 2 படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அனுஷ்கா ஷெட்டி தற்போது இயக்குனர் ஹேமந்த் மதுக்காரின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தில் மாதவன் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அஞ்சலி மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
மேலும் இந்த படத்தை டி.ஜி.விஸ்வப்ரசாத் தயாரிக்கிறார்.வரும் மார்ச் மாதம் அமெரிக்காவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாகுபலி, அனுஷ்கா, மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே