பாஜகவில் இணையும் பிரபல வீராங்கனை!
பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவில் பிரபல விளையாட்டு வீராங்கனை பபிதா போகட் இணைய உள்ளதாக தகவல் அளிக்க உள்ளது
இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவரான பபிதா போகட் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரும் இன்று பிரதமர் முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வந்துள்ளது
இதுகுறித்து பபிதா போகட் தந்தை செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘நானும் என்னுடைய மகளும் நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளோம். பாஜக அரசு காஷ்மீருக்கு அழைத்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது சிறப்பான முடிவாகும். அதேபோல் அரியானாவில் மனோகர் லால் கட்டர் தலைமையிலான பாஜக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை அடுத்து நாங்கள் இருவரும் அக் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளோம் என்று அவர் கூறி உள்ளார்
ஹரியானா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது