பாஜகவில் இணைய போகிறாரா சூப்பர் ஸ்டார்?
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சமீபத்தில் மரியாதை நிமித்தமாக பாரத பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து கூறுவதற்காக சந்தித்த மோகன்லால், தனது சமூக இயக்கம் குறித்தும் அது செய்து கொண்டிருக்கும் சேவைகள் குறித்தும் விளக்கினாராம்
இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால், பாரதிய ஜனதா கட்சியில் சேரப் போவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கேரளாவில், மோகன்லாலை களமிறக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டிருப்பதாக அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.
பாஜகவில் இணைய மோகன்லாலும் இசைவு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. திருவனந்தபுரம் தொகுதியில், மோகன்லால் போட்டியிடுவார் என்றும், இதன்மூலம், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூருக்கு, சவாலாக அவர் இருப்பார் என்றும் கூறப்படுகிறது